Elocution (பேச்சுப்போட்டி) : இயற்கை உணவு ஆரோக்கியம் (Iyarkkai onavu aarokiyam)

"இயற்கையோடு வாழ பழகு மனிதா மனிதா
இயற்கையை வெல்லுவது எளிதா எளிதா"

என்ற பாடல் வரிகளை அனைவரும் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.  அவையோர் அனைவருக்கும் எனது முதற்கண் வணக்கம்.

இயற்கையோடு வாழப்பழகி இயற்கை உணவுகளை உண்டு நெடுநாள் வாழ நாம் அனைவரும் விரும்பும் ஒன்று. எனவே "இயற்கை உணவு ஆரோக்கியம்" எனும் தலைப்பில் சிறிது பேச விரும்புகிறேன்.

நாம் தினமும் மூன்று வேளை, நான்கு வேளை வயிறு புடைக்க நன்கு உண்ணுகின்றோம்.  அதில்  எத்தனை சதவீதம் உணவு இயற்கை உணவு என்று நம்புகிறீர்கள்.

இன்று எங்கு சென்றாலும், எந்த கடையைப் பார்த்தாலும் ஜிகுஜிகுவென்று பச்சை, மஞ்சள், சிவப்பு, நீளம் என்று பல கூடுகளில் தின்பண்டங்கள், நொறுக்குத்தீனிகள், பிஸ்கட் போன்றவை தொங்குவதை காண்கின்றோம்.

இந்த உணவு பொருட்களின் புழக்கதால் இயற்கையான உணவு பொருட்களை மக்கள், பொதுவாக சிறுகுழந்தைகள் அப்புறப்படுத்தி விடுகின்றனர்.  இதன் விளைவு தான் என்ன? நான்கு ஐந்து வயதான சிறுவர்கள் தேவையற்ற கொழுப்பு மற்றும் தாதுப்புக்கள் உடலில் தங்கி வயதில் கவிந்த உடல்வாகுடன் காணப்படுகின்றனர்.  இதனால் தான் எளிதில் தொற்றுநோய்களுக்கு ஆளாகின்றனர்.

கிழங்கு, காய்கனிகள், கீரைகள் போன்று இயற்கையில் இருந்து கிடைக்கும் உணவு பொருட்களை உட்கொண்ட நமது பெரியோர்கள் இன்றும் நலமுடன் வாழ்வதை நாம் கண்கூடாக காண்கின்றோம். ஆனால் இன்றைய தலைமுறையினரோ 25-30 வயதை தாண்டியவுடனே முதுமை கோலம் பெறுவது மட்டுமின்றி diabetes, cholesterol, blood pressure போன்ற நோய்களுக்கு உள்ளாகின்றனர்.  இவையெல்லாம் நமது உணவுப் பழக்கத்தில் வந்த மாற்றங்கள் தான் என்பதை யாராலும் மறுக்கமுடியாத ஒன்று.

இதுமட்டுமா, இன்று எத்தனை பேர் தன் வீடுகளில்  சமைக்கும் உணவுகளை விரும்பி சாப்பிடுகிறார்கள்?  பெரிய பெரிய 3star, 4star, 5star ஹோட்டல்களில் சாப்பிடுவதை அந்தஸ்து என்று நினைத்து தான் பாடுபட்டு சம்பாதித்த பணத்தை கூட பொருட்படுத்தாமல் விதவிதமான ஆங்கில பெயர்கள் சூட்டிய உணவுகளை உட்கொள்வதை நாகரிகம் என்று நம்புவோர் இன்று பெரும்பாலானோர்.

ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த ஓர் உண்மை சம்பவம்.  கேரளாவின் - திருவனந்தபுரத்தில் ஒரு ஹோட்டலில் இருந்து ஷவர்மா(shavarma) எனப்படும் கோழி இறைச்சியில் தயாரித்த ஓர் உணவை உண்டு ஒரு இளைஞன் இறந்தேபோய்விட்டன்!  அதே தினம் அதே ஹோட்டலில் அதே உணவை உண்ட சிறுவர் சிறுமியர் உட்பட மேலும் 10-12 பேர் வயிற்றுபோக்கு, வாந்தி  போன்றவையால் அவதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பல இடங்களில் நடந்த அதிரடி சோதனையில் பல துடிக்கவைக்கும் உண்மைகள் வெளிப்பட்டன.  நமது சாதாரண பேரைகாயின் தோலை நீக்கி அதை வெவ்வேறு நிறங்களில் புரட்டியெடுத்து அதற்கு ஒரு புதுபெயரையும் சூட்டி சந்தைகளில் அதிக விலைக் விற்பனை செய்கின்றனர்.  என்ன? உடல் சிலிர்த்து போய்விட்டதா? இம்! நண்பர்களே மிகவும் கவனம் தேவை.

இதுமட்டுமா?  ஈக்கள் மொய்க்கும் பழங்கள் நல்ல பழங்கள் என்பார்கள்.  ஆனால் பலரும் இதை விரும்புவதில்லை.  இதனாலேயே ஈக்கள் மொய்க்காமல் இருக்க பல ரசாயன பொருட்களை பழம் மற்றும் காய்கறிகளில் குத்தி வைக்கவும், புரட்டவும் செய்கிறார்கள்.  ஏன்?  இயற்கையாக மரத்தில் காய்க்கும் காய்கனிகளுக்கு brand name காணப்படுகிறது.  சந்தேகமிருந்தால் நீங்களே இதை பரிசோதிக்கலாம்.

இன்னும் பார்ப்போம்,  வெயிலின் தாக்கம் தாங்காமல்  வந்தால் என்ன செய்ய வேண்டும்?  நல்ல குளிர்ந்த நீரை எடுத்து மடமடவென்று குடிக்கவேண்டும்.  ஆனால் இன்று குளிர்சாதன பெட்டிகளில் வைத்து குளிரவைத்த குளிர்பானங்களை தான் அதிகம் விரும்புகின்றோம்.  சமீபத்தில் ஒரு குழு நடந்திய ஆய்வு கண்டுபிடித்தது என்ன தெரியுமா?  விவசாயிகள் பயிர்களில் பூச்சிகொல்லி மருந்துகளுக்கு பதிலாக நாம் அருந்தும் சில பானங்களை பயன்படுதுகின்றனர் என்று.  அப்படி என்றால் நாம் விரும்பிகுடிக்கும் பானங்கள் பூச்சிக்கொல்லி மருந்துகளா?

மேலும் கூறப்போனால், பெரும்பாலும் குழந்தைகள் தன் தாய் வீட்டில் தயாரிக்கும் உணவுப் பொருட்களை வெறுப்பவர்கள் தான்.  இதை தெரிந்துகொண்டே டிவி களில் விளம்பரம் வருகின்றது - உங்கள் ஐந்து வயது குழந்தை ஆறடி உயரம் வைக்கவில்லையா?   உங்கள் குழந்தை படித்த படங்களை விரைவில் மறந்து விடுகின்றதா?  இதோ வருகிறது புதிய health drink.  என்ன இதெல்லாம்? 

இவ்வாறாக நாம் பார்க்கும் போது இயற்கை உணவை விட செயற்கை உணவுகளே புழக்கத்தில் உள்ளன.  அவை தீங்கு என தெரிந்தும்கூட......... எனினும் இயற்கை உணவுகளின் மகத்துவத்தை உணர்ந்து, இயற்கை உணவே ஆரோக்கியம் என உணர்ந்து, இயற்கை உணவுகளை உட்கொண்டு இன்று போகவிருக்கும் உயிரை ஓரிரு நாட்கள் கூட பிடித்து நிறுத்தி கிடைத்த வாழ்வை நலமுடன் வாழ்வோம் என்று கூறி விடை பெறுகிறேன்.  நன்றி! வணக்கம்!

--- சங்கீதா ---

Comments

  1. அருமையான பேச்சு! ஒவ்வொரு வரியும் ஆரோக்கியத்தையும் விழிப்புணர்வையும் பறைசாற்றுகின்றன...

    வாழ்த்துக்கள்
    சங்கீதா

    ReplyDelete
  2. True that there is so much marketing going on for artificial food supplements, the fun part is that people are actually going for them!Great points made Sangeetha!

    ReplyDelete
  3. I can't read Tamil, not very well anyway! Thanks so much for the Navaratri photos. Happy Vijaya Dasami!

    ReplyDelete
  4. This is very true. Advertisements use parent's concern for kids and sell all kinds of 'health drinks' and 'memory tablets' which may harm the kids on the long term. The fast food culture is growing in places where people have higher money to spend. People don't realize that they are robbed of their money and their health at the same time. Good that you chose to speak on this.

    Destination Infinity

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Chitharal Rock Cut Temple & Jain Monument

Thirparappu Waterfalls and Mahadevar Temple

Photo Album | Rameswaram-Dhanuskodi - Part 1