Poem | கலாமிற்கு சலாம்
Dr A.P.J. Abdul Kalam கலாம் எங்கள் அப்துல் கலாம் சலாம் எங்கள் சலாம் பாரத அன்னையை வானத்தில் உயர்த்தி பறக்க வைத்த கலாம் - எங்கள் கலாம் ஏவினார் விண்ணில் கலம் பூமியில் நின்றே கலாம் பாரத மண்ணின் புகழ் உலகிற்கே உணர்த்திய கலாம் - எங்கள் கலாம் முதல் குடிமகனாய் மானிட குருவாய் தீபத்தை ஏற்றிய கலாம் எழுபிறவியிலும் பாரதத் தாயின் மகனாய் பிறந்த கலாம் காலத்தை வென்ற கலாம் - எங்கள் சலாம் அப்துல் கலாம் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலுடன் - சங்கீதா Photo Courtesy: India Today